Short Story Knocking can also open many closed doors.

7 months ago
1

உங்கள் சிந்தனைக்கு

ஒரு பிரபல தொழில் அதிபரைப் பார்த்து ஒரு இளைஞர் உங்களது வெற்றியின் இரகசியம் என்ன என்று சொல்ல முடியுமா என்று கேட்டான்.

அந்த தொழிலதிபர் கூறினார் இரகசியம் என்று எதுவும் இல்லை வாய்ப்பு என்னை தேடி வரும் என்று நான் காத்திப்பதில்லை. வாய்ப்புக்கான ஒவ்வொரு வாசல் கதவுகளையும் நான் தேடிச் சென்று தட்டுவேன். சில கதவுகள் திறக்கப்படும் பல கதவுகள் மூடியே இருக்கும். அதற்கு இளைஞன் கேட்டான் எந்த கதவு எந்த வாய்ப்பு எப்படி கண்டு பிடிப்பது என்று கேட்டான். அதற்கு தொழில் அதிபர் கூறினார் அதற்கான வழிகளை உன் சிந்தனையால் கண்டு பிடிக்க வேண்டும். வீடடிலே உறங்கிக் கிடக்காமல் வெளியில் சென்று பல நபர்களை சந்திக்க வேண்டும். பல நிறுவனங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

இக் கதையின் நீதி .....தட்டினால் பல மூடிய கதவுகளும் திறக்கும்

Loading comments...