Here is the video of Irula Community extracts snake venom

2 years ago
12

http://gestyy.com/edCmv0
பா...பா..பா... பாம்பு விஷம் பிரித்தெடுப்பதை லைவாக பார்த்துள்ளீர்களா? புல்லரிக்கும் வீடியோ! | Here is the video of Irula Community extracts snake venom - Tamil Oneindia

சென்னை: பாம்புகளுக்கு எந்த தொல்லையும் கொடுக்காமல் அதன் விஷத்தை எடுக்கும் இருளர் பழங்குடியினரின் வீடியோ வைரலாகி வருகிறது. பழங்குடியினத்தவர்களான இருளர் சமுதாய மக்கள் வீடுகளுக்குள் புகும் பாம்புகளை பிடித்து பத்திரமாக காட்டுப் பகுதிகளில் கொண்டு போய் விடுவார்கள். எங்காவது பாம்பு புகுந்துவிட்டதாக தகவல் கிடைத்தவுடன் தங்கள் உயிரை பணயம் வைத்து இவர்கள் பாம்பு பிடிக்க சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றுவிடுவர்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/here-is-the-video-of-irula-community-extracts-snake-venom/articlecontent-pf766578-476760.html

இது போல் பாம்பு பிடிக்க போய் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் கடி வாங்கி இறந்தவர்கள் ஏராளம். அது போல் இந்த சமூகத்து மக்கள் பாம்புகளிடம் இருந்து விஷம் எடுப்பதிலும் வல்லவர்கள்.

பாம்பு அதே நேரத்தில் அந்த பாம்புகளுக்கு எந்த தொல்லைகளும் வராமல் அதை துன்புறுத்தாமல் இதை செய்கிறார்கள். இந்த நிலையில் இருளர் சமூகத்தினர் பாம்புவிடம் இருந்து விஷத்தை எடுத்து சிறிய குடுவையில் போடும் காட்சிகள் வைரலாகி வருகின்றன. இதை வனத் துறை மற்றும் சுற்றுச் சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாஹு வெளியிட்டுள்ளார்.

வீடியோ இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் அச்சத்தால் உறைந்து போகிறார்கள். இருளர் இன மக்களின் வாழ்வாதாரங்களில் பாம்பு பிடித்தல், அதன் விஷத்தை எடுத்து மருந்து தயாரிக்க உதவி செய்தல் உள்ளிட்டவையாகும். பாம்பு பிடித்தலில் போதிய வருமானம் இல்லாததால் சில பழங்குடியினர் வேறு தொழிலை நாடி செல்கிறார்கள்.

வீடியோவில் என்ன சரி நாம் இந்த வீடியோவுக்கு வருவோம். ராஜநாகம், கண்ணாடி விரியன், கட்டுவிரியன் உள்ளிட்ட பாம்புகளின் விஷத்தை அவற்றிற்கு எந்த பாதிப்பும் தொந்தரவும் இல்லாமல் எடுக்கிறார்கள். இந்த விஷங்கள் பாம்பு கடிக்கு எதிரான மருந்து தயாரிக்க உதவுகிறது. இதற்காக அரசிடம் இருந்து அனுமதி பெற்றே இந்த விஷத்தை எடுக்கிறார்கள்.

300 உறுப்பினர்கள் இருளர் பாம்பு பிடிப்பாளர் சங்கம் என்ற ஒன்று 1978 இல் உருவாக்கப்பட்டது. இந்த சங்கத்தில் உறுப்பினராக 300 பேர் உள்ளனர். இவர்கள் மட்டுமே பாம்பு விஷத்தை எடுக்க அதிகாரப்பூர்வமானவர்களாவர். இந்த வீடியோவை ஏராளமானோர் ஷேர் செய்து வருகிறார்கள். இருளர் பழங்குடியின மக்களை பாதுகாக்கவும் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படவும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

விழிப்புணர்வு மேலும் சிலர் அரசிடம் இருந்து அனுமதி பெற்றாலும் இது அவர்களுக்கு எந்த நேரத்திலும் ஆபத்தை விளைவிக்கும். இது குறித்த மிகப் பெரிய அளவிலான விழிப்புணர்வு தேவை. இந்த வீடியோவில் பாம்பு விஷத்தை எடுக்கும் நபர் எந்த வித பாதுகாப்பு அம்சங்களையும் அணியாதது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என நெட்டிசன்கள் கவலை கொள்கிறார்கள். அண்மையில் மரத்தின் கீழ் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் முதுகில் பாம்பு ஏறிக் கொண்டிருந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் புல்லரித்து போனது குறிப்பிடத்தக்கது.

AboutUs About us https://bit.ly/3GUPFOa
Contact us +919942258153 kvk.subadhra@gmail.com
Thank You Very Much for Sharing YourValuable Thoughts
https://ce907ax2-4vwmx5hsvt9jhzl7q.hop.clickbank.net

Loading comments...