Mysterious Region of the Sun photographed by World s powerful Solar Telescope - Tamil Gizbot

2 years ago
9

http://destyy.com/edZg6O
சூரியனின் "மர்ம பகுதி" கண்டுபிடிப்பு.. ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்! By Muthuraj | Published: Saturday, September 10, 2022, 10:25 [IST]

Read more at: https://tamil.gizbot.com/scitech/mysterious-region-of-the-sun-photographed-by-world-s-powerful-solar-telescope-034523.html

சூரியனின் (Sun) வயது எவ்வளவு என்று தெரியுமா? அது 4.603 பில்லியன் ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சூரியனுக்கும் நாம் வாழும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு என்று தெரியுமா? அது 150.66 மில்லியன் கிலோமீட்டர்கள் ஆகும்!

பல மேலோட்டமான.. சில ஆழமான! இப்படியாக சூரியனை பற்றிய, சூரியனை தொடர்புடைய பல மேலோட்டமான விவரங்கள், சில ஆழமான தகவல்கள் நம்மிடம் உள்ளன. இருந்தாலும் கூட சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சூரியனின் மர்மமான பகுதி, ஆராய்ச்சியாளர்களை மட்டுமின்றி, சாதாரண மக்களை கூட ஆச்சரியப்படவைக்கும் படி உள்ளது.

அதென்ன மர்மம்? உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த சூரிய தொலைநோக்கியான டேனிசூரியனின் மேற்பரப்பிற்கு சற்று மேலே! டேனியல் கே. இன்யூயே சோலார் டெலஸ்க்கோப் ஆனது குரோமோஸ்பியர் (Chromosphere) எனப்படும் சூரியனின் மேற்பரப்பிற்கு சற்று மேலே உள்ள வளிமண்டலத்தின் அடுக்கை (Layer of Atmosphere) புகைப்படமாக பதிவு செய்துள்ளது. வழக்கமாக சூரியனின் மர்மமான பகுதியாக கருதப்படும் குரோமோஸ்பியர்-ஐ அவ்வளவு எளிதாக புகைப்படம் எடுக்க முடியாது.

சூரியனின் மேற்பரப்பிற்கு சற்று மேலே!

சோலார் டெலஸ்க்கோப் (Daniel K. Inouye Solar Telescope) ஆனது கடந்த ஜூன் 3 ஆம் தேதி, வழக்கமான சூரிய கண்காணிப்புகளை நிகழ்த்திக் கொண்டிருந்தது. அப்போது தான் அந்த சோலார் டெலஸ்க்கோப் ஆற்றல் மிகுந்த சூரியனின் சில மர்மமான பகுதிகளை கைப்பற்றியது.

ஏனென்றால்? கரோனா (Corona) என்று பெயரிடப்பட்ட சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புற பகுதியை போலவே, குரோமோஸ்பியர் ஆனது பொதுவாக நட்சத்திரத்தின் (அதாவது சூரியனின்) ஒளிக்கோளத்தால் (Photosphere) மேகத்தால் சூழப்பட்டு இருக்கும். அது சூரியனின் மேற்பரப்புக்கு சமமானதாகும். அதை புகைப்படம் எடுப்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல!

இருந்தாலும் இது எப்படி சாத்தியமானது? இந்த கேள்விக்கு பதில் மிகவும் எளிமையானது. டேனியல் கே. இன்யூயே சோலார் டெலஸ்க்கோப் வழியாக எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் முழு சூரிய கிரகணத்தின் போது பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஃபோட்டோஸ்பியரில் (Photosphere) இருந்து வரும் ஒளி சந்திரனால் தடுக்கப்படும் போது, ​​இப்பகுதி சூரியனின் பிரதான உடலை சுற்றிய ஒரு பிரகாசமான சிவப்பு வளையமாக மட்டுமே காணப்படும். அந்த நேரத்தில் தான் சூரியனின் இந்த மர்மப்பகுதி புகைப்படமாக்கப்பட்டுள்ளது!

ஆய்வு செய்த பின்னர் காத்திருந்த இன்னொரு ஆச்சரியம்! 82,500 கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள அந்த புகைப்படம் 18 கிலோமீட்டர் ரெசல்யூஷனின் கீழ் யுஎஸ் நேஷனல் சயின்ஸ் பவுன்டேஷனால் (US National Science Foundation) வெளியிடப்பட்டது. பின்னர் யுஎஸ் நேஷனல் சயின்ஸ் பவுன்டேஷனின் ஆய்வகமானது, கைப்பற்றப்பட்ட சூரியனின் குரோமோஸ்பியர் புகைப்படத்தை ஆய்வு செய்த போது, இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது!

வழக்கத்தை விட வித்தியாசமாக உள்ளது! புகைப்படமாக்கப்பட்ட பகுதியானது, சூரிய மேற்பரப்பில் இருந்து 400 கிலோமீட்டர் முதல் 1200 கிலோமீட்டர் வரையிலாக உள்ள ஒரு அடுக்கு (Layer) என்று கண்டுபிடிக்கப்பட்டது. (வழக்கமாக) குரோமோஸ்பியரில் வெப்பநிலை ஆனது (நாசாவின் கூற்றுப்படி) கீழே சுமார் 4000 K-வும் மற்றும் மேலே 8000 K-வும் (அதாவது 3700 மற்றும் 7700 டிகிரி செல்சியஸ்) வரை மாறுபடும்.

ஆனால் "இந்த பகுதி" தனித்தன்மை வாய்ந்தது! ஏனெனில் குரோமோஸ்பியரின் கீழ் அடுக்குகளை போல் இல்லாமல், குறிப்பிட்ட லேயர் ஆனது, சூரியனில் இருந்து தொலைவில் சென்றாலும் கூட மிகவும் வெப்பமடைகிறது, அதே போல சூரியனின் மையத்திற்கு அருகில் சென்றாலும் கூட அது அதிக வெப்பமாக இருக்கிறது!

சூரிய புயல்களுக்கு தயார் ஆகலாம்! இந்த புகைப்படம் குறித்து பேசுகையில், நேஷனல் சயின்ஸ் பவுன்டேஷனின் (NSF) இயக்குனர் ஆன சேதுராமன் பஞ்சநாதன், உலகின் மிக சக்திவாய்ந்த சூரிய தொலைநோக்கியால் கைப்பற்றப்பட்டுள்ள இந்த புகைப்படம், நமது சூரியனை ஆராயும், புரிந்துகொள்ளும் முறையையே மாற்றும் என்று கூறி உள்ளார். மேலும் சூரிய புயல்கள் போன்ற நிகழ்வுகளை கணிப்பது மற்றும் அதற்கு தயாராவது தொடர்பான நமது நுண்ணறிவையும் இது மாற்றும் என்று கூறியுள்ளார்!

AboutUs About us https://bit.ly/3GUPFOa
Contact us +919942258153 kvk.subadhra@gmail.com
Thank You Very Much for Sharing YourValuable Thoughts
https://475ccj69wcz-lz3ywrsgurxxyr.hop.clickbank.net

Loading comments...