how to prepare organic inputs in agriculture

2 years ago
30

http://festyy.com/edJlfY
How to: பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், மூலிகைப் பூச்சிவிரட்டி... இயற்கை இடுபொருளின் தயாரிப்பு முறைகள்!
|how to prepare organic inputs in agriculture

இயற்கை இடுபொருள்கள்

ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பங்கள்
இயற்கை வேளாண் வித்தகர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுபாஷ் பாலேக்கர் கண்டுபிடித்த ஜீவாமிர்தம், பீஜாமிர்தம், கனஜீவாமிர்தம் போன்ற இயற்கை இடுபொருள்களின் தயாரிப்பு முறைகள் இங்கே இடம் பெறுகின்றன.

ஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 10 கிலோ, மாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் இதனுடன் ஒரு கைப்பிடி வளமான நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம், அதாவது இரண்டு நாள்கள் வைத்திருக்கவேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை வலது புறமாக சுற்றுப்படி குச்சி வைத்து கலக்கிவிட்டு வந்தால், ஜீவாமிர்தம் தயார். இது ஒரு ஏக்கருக்கான அளவு. இந்தப் பயிர் வளர்ச்சி ஊக்கியைப் பாசன நீரிலேயே கலந்துவிடலாம்.

பீஜாமிர்தம்
தண்ணீர் 20 லிட்டர், பசு மாட்டுச் சாணம் 5 கிலோ, நாட்டு மாட்டுச் சிறுநீர் 5 லிட்டர், நல்ல நுண்ணுயிரிகள் இருக்கும் வளமான மண் ஒரு கைப்பிடி அளவு. இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நன்றாக ஊறவிட வேண்டும். இதுதான் பீஜாமிர்தம். இதன் பிறகு சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம் போட்டு அதைக் கலக்க வேண்டும். இதன்பிறகே விதையை இந்தக் கரைசலில் நனையவிட்டு, விதைக்கவேண்டும். கரைசலில் சுமார் 2 மணிநேரம் விதைகளை நனையவிட்டால் போதும். பயிர்களைத் தாக்கும் வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படுகின்றன.

கனஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு மாவு போதும். இதை எல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள். கூடவே உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அந்தளவுக்கு நாட்டு மாட்டுச் சிறுநீரைக் கலந்தால் போதும். பிறகு உருட்டி நிழலில் காயவைத்து தேவைப்படும்போது உதிர்த்து பயன்படுத்தலாம். இது மானாவாரி நிலங்களுக்கு ஏற்றது.

இயற்கை விவசாய தொழில் நுட்பங்கள்
இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் தான் செல்லும் இடங்களிளெல்லாம் அமுதக் கரைசல் பயன்படுத்துவது குறித்து பேசுவார். இயற்கை விவசாயம் செய்வோர் அமுதக் கரைசல் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துவார்.
அமுதக் கரைசல்
அமுதக்கரைசல்... இதை ‘நிலவள ஊக்கி’ என்றும் சொல்கிறார்கள். இதை நிலத்தில் தெளித்ததும், 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும். நோய்த் தாக்குதல் இல்லாமல் பயிர்கள் வளர உதவும். பொதுவாக 15 நாள்களுக்கு ஒரு தடவை இந்தக் கரைசலைக் கொடுக்கலாம். பயிர்கள் மிகவும் வாட்டமாகக் காணப்பட்டால், வாரம் ஒருமுறைகூட கொடுக்கலாம். வசதியிருந்தால், தண்ணீர் பாய்ச்சும் போதெல்லாம் அதனுடன் கலந்துவிடலாம்.
தயாரிப்பு முறை...
ஒரு தடவை போட்ட மாட்டின் சாணம் (எந்த வகை மாடாக இருந்தாலும் பயன்படுத்தலாம்), சிறுநீர் ஆகியவற்றை ஒரு பிளாஸ்டிக் வாளியில் எடுத்துக்கொண்டு, அதில் ஒரு கைப்பிடி வெல்லம், ஒரு குடம் தண்ணீரைச் சேர்க்கவேண்டும். இதை 24 மணி நேரம் நிழல்பாங்கான இடத்தில் வைத்தால் அமுதக்கரைசல் தயார். ஒரு பங்கு அமுதக்கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்துப் பயிர்களுக்குத் தெளிக்கலாம். ஓர் ஏக்கருக்கு பத்து டேங்க் (1 டேங்க்-10 லிட்டர்) அளவுக்குத் தெளிக்கவேண்டியிருக்கும். பாசன நீரிலும் கலந்துவிடலாம்.

மூலிகைப் பூச்சிவிரட்டி
பயிர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் புழு, பூச்சிகளை விரட்டக்கூடியது பூச்சிவிரட்டி. நெய்வேலி காட்டாமணக்கு, நொச்சி, ஆடாதொடை, வேம்பு போன்ற இலை தழைகளை ஐந்து கிலோ அளவுக்கு எடுத்து, ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு, 10 லிட்டர் மாட்டுச்சிறுநீர் கலந்து ஏழு நாள்களுக்கு ஊற வைக்கவேண்டும். அதன்பிறகு, வடிகட்டி பயிர்களுக்குத் தெளிக்கலாம். மாட்டுச்சிறுநீர் என்பது அருமையான கிருமிநாசினி. அதைக் கலப்பதால் புழு, பூச்சிகள் விரைவாகக் கட்டுப்படும். மாட்டுச்சிறுநீர் கிடைக்காவிட்டால், தண்ணீர் சேர்த்தும் தயாரிக்கலாம். 10 லிட்டர் நீருடன் ஒரு லிட்டர் பூச்சிவிரட்டியைக் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம்.
ஏழு நாள்களுக்கு மேல் ஊறவைத்தால், இது பயிர் வளர்ச்சி ஊக்கியாக மாறிவிடும். இதையும் வீணடிக்காமல் பயிருக்குத் தெளிக்கலாம்.
வேப்பங்கொட்டைக் கரைசல்
வேப்பங்கொட்டை 5 கிலோ, காரமான வெள்ளைப்பூண்டு அரை கிலோ ஆகியவற்றை எடுத்து உரலில் இட்டு, இடித்து (எக்காரணம் கொண்டும் கிரைண்டரிலோ, மிக்ஸியிலோ அரைக்கக் கூடாது) காட்டன் துணியில் இறுக்கமாகக் கட்டி... 10 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் 24 மணி நேரம் ஊற வைத்தால், கரைசல் தயார். இதனுடன் 100 கிராம் காதி சோப்பைக் கரைத்து, 10 லிட்டர் டேங்குக்கு 500 மி.லி என்ற விகிதத்தில் கலந்து, மாலை மூன்று மணிக்குப் பிறகு தெளிக்க வேண்டும்.

பஞ்சகவ்யா தயாரிப்பு
20 லிட்டர் பஞ்சகவ்யா தயாரிப்புக்கானது!
தேவையான மூலப்பொருள்கள்:
பசுஞ்சாணம் - 5 கிலோ
பசுமாட்டுச் சிறுநீர் - 3 லிட்டர்
காய்ச்சி ஆறவைத்த பால் - 2 லிட்டர்
பசுமாட்டுத் தயிர் - 2 லிட்டர்
பசு நெய் - 500 கிராம்
நாட்டுச் சர்க்கரை - 1 கிலோ
இளநீர் - 3 லிட்டர்
கனிந்த வாழைப்பழங்கள் - 12
தென்னங் கள் - 2 லிட்டர்

About us https://bit.ly/3GUPFOa
Contact us +919942258153 kvk.subadhra@gmail.com
Thank You Very Much for Sharing YourValuable Thoughts
https://f8a0c43htg3wm758tavgm6sb7s.hop.clickbank.net

Loading comments...