ஒரு துளி கசப்பு இல்லாமல், ஆந்திரா ஸ்டைலில் பாவக்காய் பொரியல் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்.

2 years ago
5

http://festyy.com/edJkBl

Try this Andhra Style Bhavakai Fry without an ounce of bitterness. Its taste remains on the tongue.

பொதுவாகவே பாகற்காய் என்றால் கசப்பு என்று அதை காய்கறி பட்டியலில் இருந்து நாம் ஒதுக்கி வைத்திருக்கிறோம். பாகற்காய் உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது. அதனால் வாரத்தில் ஒருமுறையாவது குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கும் பாவக்காய் சமைத்து கொடுக்க வேண்டும். வீட்டில் பாகற்காய் சமைத்தால் நிச்சயமாக யாரும் விரும்பி சாப்பிட மாட்டாங்க. அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு பாவக்காய் பொரியல் ரெசிப்பி இதோ உங்களுக்காக.

முதலில் 1/2அடுத்து அடுப்பில் கடாயை வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன், வரமிளகாய் – 2 போட்டு, நன்றாக சிவக்க விட்டு மிக மிக பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கைப்பிடி போட்டு, வெங்காயம் வதங்கியவுடன், வெட்டிய பாகற்காய்களை எண்ணெயில் போட்டு நன்றாக வதக்க வேண்டும். கிலோ அளவு பாகற்காயை எடுத்து அது மேலே அடர் பச்சை நிறத்தில் ரொம்பவும் முள்ளு முள்ளாக இருந்தால், அதை லேசாக சீவி எடுத்துவிட்டு, வெட்டி உள்ளே இருக்கும் கொட்டைகளை நீக்கி விடுங்கள். அதன் பின்பு பாகற்காய் மிகவும் பொடியாக நறுக்கி சுத்தம் செய்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். - Advertisement -

பிறகு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் கொஞ்சம் பெரிய அளவில் இருக்கும் பூண்டு பற்கள் – 10, சீரகம் – 1 ஸ்பூன், வர மிளகாய் தூள் – 2 ஸ்பூன், உப்பு – 1 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு ஒரு ஓட்டு ஓட்டினால் பூண்டு நன்றாக அரைபட்டு நமக்கு கிடைத்துவிடும். இந்த மசாலா விழுதும் அப்படியே இருக்கட்டும். இதில் உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூளை கூடவோ குறைக்கவோ சேர்த்துக் கொள்ளலாம்.

பாவக்காய் எண்ணெயிலேயே முக்கால் பாகம் வதங்கி, வெந்து வந்தவுடன் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை இதில் போட்டு நன்றாக ஒரு முறை கலந்து விட்டு அடுப்பை சிம்மில் வைத்து ஒரு மூடி போட்டு வேக வைத்தால் ஐந்து நிமிடத்தில் பாவக்காய் சூப்பராக தயாராகி நமக்கு கிடைக்கும். இறுதியாக 1 ஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு இதன் மேலே பிழிந்து, நன்றாக கலந்து பரிமாறி பாருங்கள்.

சூப்பரான சுவையில் பாவக்காய் பொரியல் நமக்கு கிடைத்திருக்கும். சுட சுட சாதத்தில் இதை பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். ரொம்பவும் பெரிய பாவக்காய் இருக்கும் அல்லவா அதை வாங்காதீங்க. சின்ன சின்ன பாவக்காய் கடைகளில் விற்கும் அல்லவா அதை வாங்கி சமைத்தால் ருசி நன்றாக இருக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.
About us https://bit.ly/3GUPFOa
Contact us +919942258153 kvk.subadhra@gmail.com
Thank You Very Much for Sharing YourValuable Thoughts
https://f8a0c43htg3wm758tavgm6sb7s.hop.clickbank.net

Loading comments...