இயற்கையின் அதிசயங்கள் - புவி ஈர்ப்பு சக்தி

2 years ago
6

http://gestyy.com/edFgWi

Wonders of Nature 11 Mysterious Places Where Earth's Gravity Does Not Work |

Mysterious Places | நம் பாக்கெட்டில் இருந்து ஒரு ரூபாய் நாணயம் தவறுகிறது என்றால், கட்டாயம் அது கீழ் நோக்கி பாய்ந்து விழ வேண்டும். நிச்சயமாக அது பறந்து செல்லாது. ஆனால், இந்தப் பூமியில் புவி ஈர்ப்பு விசை வேலை செய்யாத மர்மமான இடங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
நம்மை பொருத்தவரையிலும் பசுமை போர்த்திய மலை, பரந்து விரிந்த வானம், வற்றாத மகா சமுத்திரங்கள், பாய்ந்தோடும் ஆறுகள், பனி மலைகள், எரிமலைகள் என கண்ணெதிரே நாம் பார்க்கும் இயற்கையின் அதிசயங்கள் வெகு குறைவு. நம் கற்பனைக்கும் எட்டாத பல விஷயங்களை தன்னிடத்தில் வைத்திருக்கிறது இயற்கை.

ஆங்கிலேயே இயற்பியல் விஞ்ஞானி கடந்த 17ஆம் நூற்றாண்டில் முதன் முதலாக புவி ஈர்ப்பு சக்தியை கண்டறிந்தார். அதன் அடிப்படையில், இந்த பூமியில் உள்ள அனைத்து பொருட்களுமே புவி ஈர்ப்பு சக்திக்கு உட்பட்டது என்று கருதப்படுகிறது. புரியும்படி சொன்னால், நம் பாக்கெட்டில் இருந்து ஒரு ரூபாய் நாணயம் தவறுகிறது என்றால், கட்டாயம் அது கீழ் நோக்கி பாய்ந்து விழ வேண்டும். நிச்சயமாக அது பறந்து செல்லாது. ஆனால், இந்தப் பூமியில் புவி ஈர்ப்பு விசை வேலை செய்யாத மர்மமான இடங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

மேல்நோக்கி செல்லும் அருவி: தமிழில் நீர்வீழ்ச்சி என்ற சொல் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். நீரானது கீழ் திசையை நோக்கி செல்லுதலே இந்த சொல்லுக்கான பெயர் காரணம் ஆகும். ஆனால், நீர் மேல் நோக்கி பாயும் விந்தையை நீங்கள் பார்த்ததுண்டா? மகாராஷ்டிர மாநிலம், கொங்கன் கடலோரப் பகுதியை ஒட்டிய டெக்கான் மலைப்பகுதியில் இந்த அருவி இருக்கிறது. இங்கு காற்றின் திசை மேல்நோக்கி பலமடங்கு வேகமாக சுழல்வதால் அருவியானது மேல்நோக்கி பாய்கிறது.

மவுண்ட் அராகட்ஸ், அர்மேனியா: துருக்கி மற்றும் அர்மேனியா எல்லைகளுக்கு இடையே அமைந்துள்ளது. இங்கு ஒரு காரை நியூட்ரல் போட்டு நிறுத்தினாலும், தானாகவே மலையேறிச் செல்கிறதாம். இதை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்காண மக்கள் இங்கு வருகின்றனர். இந்த மலையில் ஆறு ஒன்றும் மேல்நோக்கி பாய்கிறதாம்.

சாண்டா க்ரூஸ் மர்ம பிரதேசம், அமெரிக்கா: கலிஃபோர்னியா மாகாணத்தின் சாண்டா க்ரூஸ் பகுதியில் சுமார் 150 அடி சுற்றளவில் இந்த இடம் அமைந்துள்ளது. இங்கு நீங்கள் அந்தரத்தில் நடந்து செல்ல வேண்டியிருக்கும். திடீரென்று விழுபவர்களும் உண்டு. ஆனாலும், சுவாரஸ்யம் கருதி மக்கள் இங்கு வருகின்றனர்.

செயிண்ட் இக்னேஸ் மர்ம பிரதேசம், அமெரிக்கா: இங்கும் 300 அடி சுற்றளவில் புவி ஈர்ப்பு விசை வேலை செய்வதில்லை. உங்கள் கேமரா ஸ்டாண்ட் கூட நேராக நிற்க வைக்க முடியாது. இங்கு நிற்கும் போது, நீங்கள் மிதப்பதை போல உணருவீர்கள்.

ஓரிகான் வோர்டெக்ஸ், அமெரிக்கா: பழங்காலத்தில் பயணம் மேற்கொள்கையில் இப்பகுதியை கண்டதும் குதிரைகள் நின்று விடுமாம். இங்கும் புவி ஈர்ப்பு விசைக்கு எதிரான நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. அதாவது கட்டுமானங்கள் கூட சாய்ந்த நிலையிலேயே உள்ளன.

ஹூவர் அணை, அமெரிக்கா: சுமார் 221.4 மீட்டர் உயரம் கொண்ட இந்த அணைக்கு சென்று பாட்டிலில் இருந்து நீங்கள் தண்ணீரை கொட்டினால், அது கீழே விழாது. மாறாக, தண்ணீர் துளிகள் காற்றில் பறந்து கொண்டிருக்கும்.

ஸ்போக் மலை, ஃபுளோரிடா: இங்கும் மலையேற்றப் பகுதியில் டிரைவர்கள் இல்லாமலேயே வாகனங்கள் மேல்நோக்கிச் செல்லும். நீங்கள் காரை நிறுத்தினாலும் கூட, அது மேல்நோக்கி இழுத்துச் செல்லப்படும். இங்கு புவி ஈர்ப்பு விசை இல்லை என்பதால் இப்படி நடக்கிறது என்று கூறப்படுகிறது.

மேக்னடிக் மலை, இந்தியா: லே-கார்கில் நெடுஞ்சாலையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இது அமைந்துள்ளது. இங்கும் கார்கள் மேல்நோக்கி செல்லும். கடல் மட்டத்தில் இருந்து 14 ஆயிரம் அடி உயரத்தில் இது அமைந்துள்ளது.

கியாகிடியோ பகோடா, மியான்மர்: தங்க மலை என்று அழைக்கப்படும் இந்த இடம் பர்மாவில் அமைந்துள்ள புத்தமத வழிபாட்டு தலம் ஆகும். இந்த மலை மீதுள்ள தங்க நிறத்தில் உள்ள குன்று திடீரென்று பார்க்கையில் விழ இருப்பதைப் போன்று தோன்றும். ஆனால், அதே இடத்தில் 2,500 ஆண்டுகளாக உள்ளது.

About us https://bit.ly/3GUPFOa
Contact us +919942258153 kvk.subadhra@gmail.com
https://329574yg5e28cy3mmooelzdo53.hop.clickbank.net

Loading comments...