இனி தொந்தரவே இல்ல, நேரடி satellite

2 years ago
7

No more worries, direct satellite connection: interesting information about iPhone 14!

By Karthick M
| Published: Monday, August 29, 2022, 14:49 [IST]

புதிய iPhone 14 அம்சங்கள் அதன் அறிமுகத்திற்கு முன்னதாக ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதன்படி இந்த ஐபோன் மாடலானது நேரடி செயற்கைக்கோள் இணைப்பைப் பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் ஐபோன் 14
ஐபோன் 14 செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் என ஏரத்தாள முடிவு செய்யப்பட்டுவிட்டது. செப்டம்பர் 7 ஆம் தேதி ஆப்பிள் அறிமுக நிகழ்வை நடத்த இருக்கிறது.
இந்த நிகழ்வு குறித்து போஸ்டர் வெளியானது. அதில் far out என குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது "தொலைவில்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் ஒரு டுவிஸ்ட்-ம் உள்ளது. தகவலை சற்று விரிவாக பார்க்கலாம்.
நேரடியாக சாட்டிலைட் இணைப்பு
ஐபோன் 14 சீரிஸ் செப்டம்பர் 7 அன்று அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஐபோன் மாடல் நேரடியாக சாட்டிலைட் இணைப்பை பெறும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
மொபைல் போனுக்கும் சாட்டிலைட் இணைப்புக்கும் என்ன சம்பந்தம், சாட்டிலைட் இணைப்பை பெறுவதனால் என்ன பலன் போன்ற பல்வேறு கேள்விகளுக்கான விடை இதோ.
சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள செயற்கைக்கோள்
ஐபோன் 14 சீரிஸ் செயற்கைக்கோள் இணைப்பு விருப்பத்தை வழங்கக்கூடும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
பூமியை சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள செயற்கைக்கோளை பயன்படுத்தி ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தகவலைக் கொண்டு செல்லலாம்.
செல்லுலார் இணைப்பு இல்லாத பகுதிகளில் செயற்கைக்கோள் இணைப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த இணைப்பை பெறுவதற்கு சிறப்பு மோடம் ஒன்று தேவைப்படலாம் என கூறப்படுகிறது.
செயற்கைக்கோள் தகவல் தொடர்பு ஆலோசகர்
கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட ஆராய்ச்சி நிறுவனமான மீடியா அண்ட் ஃபைனான்ஸ் அசோசியேட்ஸ் இன் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு ஆலோசகர் டிம் ஃபாரார் மூலம் புதிய ஐபோன் 14 சீரிஸ் இன் செயற்கைக்கோள் நுட்பம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
டிம் ஃபாரார் இதுகுறித்த வெளியிட்ட தகவலை பார்க்கலாம். செப்டம்பர் 7 ஆம் தேதி அறிமுக நிகழ்வு குறித்த புகைப்படத்தில் இந்த நுட்பம் குறித்த தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Go for launch. Tune in for a special #AppleEvent on September 7 at 10 a.m. PT.

விண்மீன்கள் நிரம்பிய ஆப்பிள் லோகோக்கள் அந்த புகைப்படத்தில் ஆப்பிள் லோகோ விண்மீன்கள் நிறைந்த வான் கலைப்படைப்பைக் கொண்டுள்ளது.

ஐபோன் மாடல்களில் செயற்கைக்கோள் இணைப்பு விருப்பத்தை பெறுவதற்கு குளோபல்ஸ்டாருடன் இணைந்து செயல்படும் என ஃபாரர் குறிப்பிட்டுள்ளார்.

செயற்கைக்கோள் இணைப்பு நுட்பம் ஐபோன் 14 இல் உள்ள செயற்கைக்கோள் இணைப்பு நுட்பம் செயல்படுத்தப்படும் போது, Sender மற்றும் Receiver என்ற இருவழி உரைச் செய்திகளும் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நுட்பம் இலவசமாக பயனர்களுக்கு வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம் எதிர்காலத்தில் அழைப்பு மற்றும் MMS சேவைகள் விரிவடைய இருப்பது தெரியவருகிறது.

செயற்கைக்கோள் நுட்பம் முதலில் அமெரிக்காவிலும் பிறகு இந்தியா உட்பட பிற நாடுகளுக்கு கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது.

ஸ்பேஸ் எக்ஸ் இன் செயற்கைக்கோளுடன் இணைக்க வாய்ப்பு பிரபல ஆப்பிள் ஆய்வாளரும், பத்திரிக்கையாளருமான மார்க் குர்மன் இந்த நுட்பம் குறித்து முன்னதாகவே தெரிவித்தார்.

இவர் வெளியிட்ட தகவலில் வாட்ச் ப்ரோ சாதனமும் செயற்கைக்கோள் தகவல் தொடர்பை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன்களில் செயற்கைக்கோள் நுட்பத்தை இணைக்க சிறப்பு மோடம் சிப் உட்பொதிக்க வேண்டும் என குர்மன் குறிப்பிட்டார்.

இவர் வெளியிட்ட தகவலில் வாட்ச் ப்ரோ சாதனமும் செயற்கைக்கோள் தகவல் தொடர்பை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன்களில் செயற்கைக்கோள் நுட்பத்தை இணைக்க சிறப்பு மோடம் சிப் உட்பொதிக்க வேண்டும் என குர்மன் குறிப்பிட்டார். "இதுபோன்ற செயற்கைக்கோள் நுட்பத்துடன் வரும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் ஸ்பேஸ் எக்ஸ் இன் செயற்கைக்கோளுடன் இணைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற நுட்பங்கள் எதிர்காலத்தில் இணைப்பு எப்படி இருக்கும் என்பதை குறிக்கிறது.

மேம்பாட்டு அம்சங்களுடன் செல்பி கேமரா அதேபோல் வரவிருக்கும் ஐபோன் 14 சாதனத்தின் செல்பி கேமரா கூடுதல் மேம்பாட்டு அம்சங்களை கொண்டிருக்கும் என பிரபல ஆப்பிள் ஆய்வாளர் Ming-Chi Kuo வெளியிட்டார்.

ஆப்பிள் நிறுவனம் வரவிருக்கும் ஐபோன் சாதனத்தின் முன்பக்க கேமராவிற்கு என எல்ஜி இன்னோடெக் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து ஐபோன் 14 முன்புற கேமராவின் மேம்பாடு என்பது இதுவரை கண்டிறாத வகையில் இருக்கும் எனவும் இந்த சாதனத்தின் முன்பக்க கேமராவானது ஆட்டோஃபோகஸ் தன்மையை ஆதரிக்கும் எனவும் குறிப்பிட்டார்.

About us https://bit.ly/3GUPFOa
Contact us +919942258153 kvk.subadhra@gmail.com
https://7481aj1g3c5xi76ig7fbb7133w.hop.clickbank.net

Loading comments...