பளபளவென மின்னும் வியாழன் கிரகம்.! பக்கத்துல பாருங்க..

2 years ago
7

http://ceesty.com/edAnGu

வாஷிங்டன்: ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் எடுத்துள்ள வியாழன் கிரகத்தின் புதிய வியக்கத்தக்கப் படங்களை நாசா வெளியிட்டு உள்ளது.

The planet Jupiter is shining brightly. Look at the side.. Damn! James Webb releases new films

Read more at: https://tamil.oneindia.com/news/washington/new-jupiter-pics-captured-by-james-webb-telescope-show-rings-auroras-472179.html

பிரபஞ்சத்தின் தோற்றம், அது எப்படி உருமாற்றம் அடைந்து இப்போது நாம் இருக்கும் நிலையை எட்டியது என்பதெல்லாம் குறித்துக் கண்டறிய உலகெங்கும் ஆய்வாளர்கள் தொடர் முயற்சி எடுத்து வருகின்றனர்.

இதற்காக ஜேம்ஸ் வெப் என்ற தொலைநோக்கியை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடா விண்வெளி ஆய்வு மையங்கள் இணைந்து விண்வெளிக்கு அனுப்பி உள்ளன.

இருளில் ஒளிரும் வியாழன்'.. படம்பிடித்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி...மனிதன் வாழ சான்ஸ் இருக்கா?

புதிய படங்கள் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் அங்கிருந்து எடுக்கும் வியக்கத்தக்கப் படங்களை நாசா அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் எடுத்த வியாழன் கிரகத்தின் (ஜீபிட்டர்) புதிய படங்கள் இப்போது வெளியிடப்பட்டு உள்ளது. இதுவரை கிடைத்ததில் இதுதான் வியாழன் கிரகத்தின் மிகத் தெளிவான படமாகும். இது வியாழன் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ள உதவுவதாக நாசா குறிப்பிட்டு உள்ளது.

வியாழன் கிரகம் இந்தப் படம் கடந்த ஜூலை 27ஆம் தேதி எடுக்கப்பட்டதாகும். அதன் பின்னர் டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்டு பின்னர் இந்தப் படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்தப் படத்தில் வியாழன் கிரகத்தின் வடக்கு மற்றும் தென் துருவங்களில் அரோராக்கள் அதில் தெளிவாகப் பதிவாகி இருக்கிறது. மேலும், வியாழனைச் சுற்றி இருக்கும் ரிங்குகளும், அதன் அருகே இருக்கும் சிறுகோள்களும் கூட இந்த படத்தில் தெளிவாகப் பதிவாகி உள்ளது.
மிகத் தெளிவான படம் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோபின் வியாழன் கிரகம் பற்றிய படம் இந்தளவுக்குத் தெளிவாக இருக்கும் என்று தாங்களே எதிர்பார்க்கவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். வியாழன் சுற்றி இருக்கும் வளையங்கள், சிறிய செயற்கைக்கோள்கள் என அனைத்தும் ஒரே படத்தில் உள்ளது. இவை ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பின் அகச்சிவப்பு கேமரா (NIRCam) மூலம் எடுக்கப்பட்டது ஆகும். தெளிவான படங்களை எடுக்க இதில் தனியாக மூன்று சிறப்பு அகச்சிவப்பு ஃபில்டர்களும் உள்ளன.

தெரிந்து கொள்ள முடிகிறது வியாழனின் வடக்கு மற்றும் தெற்கு துருவங்கள் பற்றிய கூடுதல் தகவல்களை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. சிவப்பு நிறங்களில் மேப் செய்யப்பட்ட ஃபில்டர்களில் அரோராக்கள் பிரகாசமாகத் தெரிகிறது. இவை கீழ் மேகங்கள் மற்றும் மேல் மூடுபனிகளில் இருந்து பிரதிபலிக்கும் ஒளியாகும். மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ள நிறங்கள் வடக்கு மற்றும் தெற்கு துருவங்களைச் சுற்றி மூடுபனிகள் இருப்பதைக் காட்டுகிறது. நீள நிறத்தில் இருக்கும் பகுதிகள் பிரதான மேகத்தைக் காட்டுகிறது.

ஜேம்ஸ் வெப் இதுபோன்ற ஆய்வுப் பணிகளுக்காகத் தான் ஜேம்ஸ் வெப் என்ற தொலைநோக்கியை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடாவின் விண்வெளி ஆய்வு மையங்கள் இணைந்து கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று விண்வெளிக்கு அனுப்பி இருந்தது. ஏற்கனவே விண்ணில் இருக்கும் ஹப்பிள் தொலைநோக்கியின் அப்டேட் தான் இது. 20.197 மீட்டர் நீளம். 14.162 மீட்டர் அகலம் கொண்ட இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி முதலில் பதிவு செய்த படத்தைச் சமீபத்தில் தான் அமெரிக்க அதிபர் பைடன் வெளியிட்டு இருந்தார்.

About us https://bit.ly/3GUPFOa
Contact us +919942258153 kvk.subadhra@gmail.com
https://217c04w8v85wbwblsol4ykel9h.hop.clickbank.net

Loading comments...