The world's first roundabout set up under the sea... they have made it with a big rock!

2 years ago
1

http://corneey.com/edm68M

The world's first roundabout set up under the sea... they have made it with a big rock!

Published: Thursday, July 28, 2022, 8:30 [IST] By Sathish Kumar

கடலுக்கு அடியில் அமைக்கப்பட்ட உலகின் முதல் ரவுண்டனா கூடிய சுரங்கம் பற்றிய முக்கியமான விபரங்களை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம்.

பேரோ தீவின் தலைநகரான டோர்ஷாவ்னிலேயே உலகின் முதல் ரவுண்டானா உடனான சுரங்க வழிப்பாதை கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ளது. மிக கைதேர்ந்த பொறியியல் திறனை வெளிக்காட்டும் வகையில் இதன் உருவாக்கம் அமைந்துள்ளது. கடலுக்கு அடியில் இருக்கும் இந்த சுரங்கம் கடலை பிரதிபலிக்கும் வகையில் கடல் நீல மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கின்றது.

இந்த அலங்காரம் பயணிகளின் கண்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. ஏற்கனவே, இந்த சுரங்கத்தின் படங்கள் இணையத்தில் வைரலாகச் தொடங்கிவிட்டன. ஃபாரோஸில் அமைந்துள்ள மூன்று முக்கிய தீவுகளை இணைக்கும் வகையில் இந்த சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. விட்டானஸ் பகுதியில் தொடங்கும் சுரங்கம் நீருக்கு அடியிலேயே சென்று ஸ்ட்ரெண்டர் மற்றும் ரோகின் எனும் இரு பிற முக்கிய தீவுகளை இணைக்கின்றது.

6.9 மைல் நீளத்திற்கு இந்த சுரங்கப் பாதை கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. அதாவது, 11.2 கிமீ நீளம் இடைவெளியில் அது உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த சுரங்கத்தின் பயன்பாட்டால் பயண நேரம் பெருமளவில் குறைந்திருப்பதாக டோர்ஷாவ்ன் தீவு வாசிகள் தகவல் தெரிவித்திருக்கின்றனர். இந்த சப்-சீ டனல் ஈஸ்டுரோயர்டன்னில் (Eysturoyartunnil) எனும் பெயரில் தீவு வாசிகளால் செல்லமாக அழைக்கப்படுகின்றது.

2020 டிசம்பர் 19 அன்றே இந்த டனல் திறக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுவே உலகின் முதல் நீரடிக்கு அடியில் அமைந்திருக்கும் சுரங்கம் ஆகும். சுமார் 72 மீட்டர் ஆழத்தில் இந்த சுரங்கம் அமைக்கப்பட்டிருக்கின்றது. சுரங்கத்தின் மையப்பகுதியிலேயே பிரமாண்ட தூண் அமைக்கப்பட்டிருக்கின்றது. பெரிய மலையைக் குடைந்தே இந்த தூண் அமைக்கப்பட்டிருக்கின்றது.
கடலுக்கு அடியில் தூணுடன் பயன்பாட்டில் இருக்கும் உலகின் முதல் சுரங்கம் இதுவாகும். பிள்ளரை சுற்றிலும் 80 மீட்டருக்கு மனித உருவத்தை பிரதிபலிக்கும் ஸ்டீல் பிளேட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த அமைப்பு நெருப்பு குழம்பை வெளியேற்றும் மலையை சுற்றி மக்கள் ஒன்றுகூடி கைகோர்த்து நிற்பதைபோல் காட்சியளிக்கின்றது. மக்களின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் விதமாக இந்த அமைப்பு பில்லரை சுற்றிலும் வழங்கப்பட்டிருக்கின்றது. இது சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது.

மூன்று முக்கிய தீவுகளையும் இணைக்கும் வகையில் இந்த சுரங்கம் இருப்பதால் மூன்று தீவுகளைச் சேர்ந்த மக்களும் தற்போது கூடுதல் நெருக்கமானவர்களாக மாறியிருக்கின்றனர். முன்னதாக 25 கிமீ சுற்றி சென்று பிற தீவுகளுக்கு சென்று வந்த மக்கள் தற்போது வெறும் 5 கிமீ பயணத்திலேயே ரோகினில் இருந்து ஸ்ட்ரென்டரை அடைந்து வருகின்றனர்.

மழை காலத்தின்போது பயன்படுத்தும் வகையில் இந்த சுரங்கம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. மழை பொழியும் சுரங்கத்திற்குள் சேரும் நீரை உடனடியாக வெளியேற்றும் வகையில் பைப் சிஸ்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுதவிர, காற்றோட்டத்தை உறுதிப்படுத்தக் கூடிய சிஸ்டமும் சுரங்கத்திற்குள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

அழகோவியமாகக் காட்சியளிக்கும் இந்த டனலை ஃபேரோவஸ் பப்ளிக் லிமிடெட் எனும் நிறுவனம் கட்டமைத்திருக்கின்றது. சுமார் 260 மில்லியன் யூரோக்கள் செலவில் அது கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. அதேவேலையில், இந்த டனலில் சும்மா சென்று வர முடியாது. இதற்கு டோல் கட்ட வேண்டியிருக்கு. 10 யூரோக்கள் செலுத்த வேண்டுமாம். இந்த டனல் வாயிலாக கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு மற்றும் சில டனல்களை அமைக்க ஃபேரோ தீவுகள் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

தற்போது இந்த டனலில் பயணிப்பதற் என்றே வெவ்வெறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வலம் வந்த வண்ணம் இருக்கின்றனர். இதுமட்டுமின்றி, உள்ளூர் வாசிகளும் அதிகளவில் இந்த டனலில் பயணித்த வண்ணம் இருக்கின்றனர். ஆகையால், இப்போதே ஃபேரோ தீவுகள் நிர்வாகத்திற்கு வருமானம் கொட்டோ கொட்டென கொட்டிக் கொண்டிருக்கிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
About Us https://bit.ly/3GUPFOa +919942258153 kvk.subadhra@gmail.com
Thank You Very Much for Sharing YourValuable Thoughts
https://www.digistore24.com/redir/428516/CHUS87/

Loading comments...