Premium Only Content
Simple beauty tips at home to treat cracked feet
By Mani- Jul 18, 2022, 03:21PM IST அழகு குறிப்புகள்
Simple beauty tips at home to treat cracked feet
குளிர்காலத்தில் சந்திக்கும் ஓர் பிரச்சனை வறட்சியான சருமம். குளிர்காலத்தில் நம் சருமம் ஈரப்பசையை முற்றிலும் இழந்துவிடும். இதனால் சருமத்தில் தோல் உரிய ஆரம்பித்து, சருமத்தின் அழகே பாழாகும். அதிலும் பாதங்களில் சிலருக்கு அதிகப்படியான வறட்சியினால் குதிகால் வெடிப்பு மற்றும் பாதங்களைச் சுற்றி தோல் உரிய ஆரம்பித்து, அசிங்கமான தோற்றத்தைத் தரும். இந்த நிலையைத் தடுப்பதற்கு பலர் கண்ட க்ரீம்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் இயற்கை வழிகளின் மூலமே இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். ஏனெனில் இங்கு பாதங்களில் உரியும் இறந்த தோல்களை நீக்குவதற்கான சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால், குளிர்காலத்திலும் பாதங்களை மென்மையாக வைத்துக் கொள்ளலாம். வாருங்கள் அவற்றைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
இரவில் படுக்கும் போது, கற்றாழை ஜெல்லை பாதங்களில் தடவி நன்கு உலர வைத்து, பின் கால்களில் சாக்ஸ் அணிந்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கால்களைத் தேய்த்துக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்வதன் மூலம் பாதங்களில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு, பாதங்கள் மென்மையாக இருக்கும்.
தேனில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையினால், இது பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் பாதங்களில் உள்ள வறட்சியைப் போக்க, இரவில் படுக்கும் முன் தேனை பாதங்களில் தடவி மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைதது, பின் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை 5-10 நிமிடம் ஊற வைத்து, பின் சாக்ஸ் அணிந்து படுக்க வேண்டும்
கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாற்றினை சரிசம அளவில் எடுத்துக் கொண்டு ஒன்றாக கலந்து, அக்கலவையினுள் பாதங்களை வைத்து 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் அல்லது வாரம் 3 முறை செய்து வந்தால், பாதங்களில் உள்ள இறந்த செல்கள் மற்றும் வறட்சி தடுக்கப்பட்டு பாதங்கள் மென்மையாக இருக்கும்.
எப்சம் உப்பில் மக்னீசியம் அதிகம் உள்ளது. இது சருமத்திற்கு மிகவும் நல்லது. அத்தகைய உப்பை நீரில் கலந்து, வாரம் இரண்டு முறை அந்நீரில் பாதங்களை ஊற வைத்து கழுவி வர, பாதங்கள் சுத்தமாகி மென்மையடையும். தினமும் இரவில் படுக்கும் முன் தேங்காய் எண்ணெயை பாதங்களில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து, பின் கால்களுக்கு சாக்ஸ் அணிந்து வர, பாதங்களில் உள்ள வறட்சி தடுக்கப்பட்டு, பாதங்களும் மென்மையாக இருக்கும்.
டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, பாதங்களில் தடவி 10 நிமிடம் கழித்து, பாதங்களில் வேஸ்லின் தடவி, சாக்ஸ் அணிந்து கொள்ள வேண்டும். இப்படி தினமும் இரவில் செய்து வந்தால், பாதங்களில் ஈரப்பசை தக்க வைக்கப்பட்டு, பாதங்கள் பிரச்சனையின்றி இருக்கும். குளிர்காலத்தில் தினமும் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்த வெதுவெதுப்பான நீரில் கால்களை 10 நிமிடம் ஊற வைத்து, பின் பாதங்களை பிரஷ் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தாலேயே பாதங்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
About Us https://bit.ly/3GUPFOa +919942258153 kvk.subadhra@gmail.com
Thank You Very Much for Sharing YourValuable Thoughts
https://www.digistore24.com/redir/419540/CHUS87/
-
LIVE
Bitfinex
5 hours agoBitfinex Talks Live at PlanB El Salvador - Day 2
336 watching -
LIVE
Nerdrotic
1 hour agoCap 4 and Emelia Perez BACKLASH! Acolyte is Still CANCELED! Hollywood STFU | Friday Night Tights 339
4,575 watching -
41:47
Candace Show Podcast
1 hour agoBecoming Brigitte: An Introduction
20.9K25 -
DVR
vivafrei
3 hours agoBernie Gets DESTROYED! Confirmation Hearings RECAP! D.C. Aviation Disaster & MORE!
43K48 -
1:34:42
The Quartering
4 hours agoNew Crash Footage PROVES Whose At Fault, Air Traffic Control Exposed, RFK Blasted, AI Issues
107K34 -
4:56:18
Right Side Broadcasting Network
1 day agoLIVE REPLAY: White House Press Secretary Karoline Leavitt Holds Press Briefing - 1/31/25
259K79 -
LIVE
Dr Disrespect
5 hours ago🔴LIVE - DR DISRESPECT - PUBG - WHAT WINNING LOOKS LIKE
4,370 watching -
Twins Pod
16 hours agoThe Q Anon Shaman EXPOSES The Truth of J6! | Twins Pod - Episode 50 - The Q Shaman
45K6 -
1:02:51
PMG
18 hours ago $0.68 earnedRFK, Immigration & DeepSeek
12.3K1 -
LIVE
Scammer Payback
2 hours agoCalling Scammers Live
370 watching