Noodles on the planet Mars: the photo sent by the rover, scientists are surprised!

2 years ago
14

http://corneey.com/edcYRZ

By Karthick M

Published: Tuesday, July 19, 2022, 8:30 [IST]

நாசாவின் ரோவர் செவ்வாய் கிரகத்தில் உலா வந்து அங்கிருந்து பல்வேறு புகைப்படத்தை வெளியிட்டு வருகிறது. கடந்த மாதம் செவ்வாய் கிரகத்தில் இரண்டு பாறைகளுக்கு இடையில் இருந்த பளபளப்பான வெள்ளை நிற பொருளின் அரிய புகைப்படத்தை நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் பதிவு செய்து அனுப்பியது. ஆனால் குறிப்பிட்ட தினங்களுக்கு பிறகு இது ரோவரினால் ஏற்பட்ட குப்பையின் ஒரு பகுதி என கண்டுபிடிக்கப்பட்டது.

பெர்சவரன்ஸ் ரோவரின் புதிய புகைப்படம்
செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் புறங்களையும், நிலப் பரப்புகளையும் ஆய்வு செய்வதற்கு என நாசா செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் ரோவரை தரையிறக்கி ஆய்வு செய்து வருகிறது. சிவப்பு கிரகமான மார்ஸ் இன் ஏணைய இடத்தை காட்சியாக பதிவு செய்து ரோவர் அனுப்பி வருகிறது. அதன்படி பெர்சவரன்ஸ் ரோவர் புதிய ஒரு புகைப்படத்தை அனுப்பி இருக்கிறது.
நூடுல் வடிவத்தில் உள்ள பொருள்
பெர்சவரன்ஸ் ரோவர் நூடுல் வடிவத்தில் உள்ள மற்றொரு புகைப்படத்தை தற்போது பகிர்ந்து இருக்கிறது. பெர்சவரன்ஸ் ரோவரின் முன்பக்கத்தில் அபாயத் தடுப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக ரோவர் பாதுகாப்பாக நகர்த்தப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த செவ்வாய் கிழமை இந்த கேமராவில் தான் செவ்வாய் கிரகத்தின் நூடுல் போன்ற பொருள் குறித்த புகைப்படம் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது.
அபாயத் தவிர்ப்பு கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம்
இதுகுறித்து நாசா தெரிவிக்கையில், "ரோவரின் முன்புற அபாயத் தவிர்ப்பு கேமராக்களில் இருந்து இந்த புகைப்படம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ரோவர் இயங்கும் போதும், அதன் கைவடிவ இயந்திரங்கள் பயன்படுத்தும் போதும் அதை பாதுகாக்க இந்த கேமராக்கள் நிலப்பரப்பை கண்காணிக்கும். தற்போது காட்சிப்படுத்தப்பட்ட நூடுல் போன்ற பொருள் என்னவென்று இன்னும் தெரியவில்லை" என விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதி இருக்கா?
முன்பு செவ்வாய் கிரகத்தில் காணப்பட்ட பொருட்களை போலவே இதுவும் ஏதாவது குப்பைத் துண்டுகளாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இது நிச்சயமாக உண்ணக்கூடிய பொருட்கள் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருக்கிறதா அல்லது அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதேனும் சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் ஆய்வு செய்து வருகிறது.
இது அதுவாக கூட இருக்கலாம்
ரோவர் அனுப்பியுள்ள புகைப்படத்தில் உள்ள பொருள் என்னவென்று விஞ்ஞானிகளால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. நாசாவின் செவ்வாய்க் கிரக பயணத்தில் ஏற்பட்ட குப்பையாக கூட இது இருக்கலாம் என கூறப்படுகிறது.
விரைவில் விஞ்ஞானிகள் மூலம் வெளியிடப்படும்
செவ்வாய் கிரகத்தை பொறுத்தவரை குப்பை பொருள் என்பது பொதுவான பிரச்சனைகளாக இருந்து வருகிறது. குப்பையை வகைப்படுத்துவது என்பது பெரும் சிக்கலை விளைவிக்கிறது. இந்த புகைப்படம் குறித்த தெளிவான விளக்கம் விரைவில் விஞ்ஞானிகள் மூலம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீவிர ஆராய்ச்சியல் நாசா
1976 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து பல்வேறு புதிய புதிய சாதனங்களை உருவாக்கி பல கண்டுபிடிப்புகளை நாசா நிகழ்த்தி வருகிறது.
செவ்வாய் கிரகத்தில் கச்சிதமாக செதுக்கப்பட்ட கதவு
நாசாவின் மார்ஸ் ரோவர் ஆனது செவ்வாய் கிரகத்தில் கச்சிதமாக செதுக்கப்பட்ட கதவு கண்டுபிடிக்கப்பட்டது. மார்ஸ் ரோவர் கிளிக் செய்த புகைப்படத்தில் சுவாரஸ்யமான அம்சம் காணப்பட்டிருக்கிறது. இது வேற்றுகிரக வாசிகளால் செதுக்கப்பட்டிருக்கும் என வதந்தித் தகவல்கள் தெரிவித்தது. அதேபோல் செவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரக வாசிகள் இருப்பதற்கான ஆதாரமாகவும் இது பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
உண்மையில் இது என்ன?
இதேபோல் செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் பாறைகளுக்குள் அமைந்திருக்கும் இந்த வாசல் ஆனது செவ்வாய் கிரகத்தின் மறைவிடம் அல்லது மற்றொரு பிரபஞ்சத்திற்கான நுழைவு வாயிலாக இருக்கலாம் என தகவல்கள் வெளியானது. மேலும் சிலர் இந்த கிரகம் சில காலமாக பல நிலநடுக்கங்களை எதிர்கொண்டது இதன் காரணமாக ஏற்பட்ட ஒரு அழுத்தத்தினால் இது ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர். உண்மையில் இது என்ன என்பது குறித்தும் எப்படி உருவானது என்பது குறித்தும் அறிந்து கொள்ள ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாசா பகிரும் புகைப்படம்
செவ்வாய் கிரகம் தொடர்பான பல ஆராய்ச்சிகளை நாசா போன்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள், மிகவும் ஆர்வமாக ஆராய்ந்து வருகிறது. செவ்வாய் கிரகம் குறித்து எதிர்பார்த்திறாத பல புதிய தகவல்கள் மற்றும் பல விசித்திரமான தகவல்களை நாசா கண்டறிந்து, அதன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிர்ந்து மக்களுக்கு விளக்கம் அளித்து வருகிறது.
பாம்பின் தலை போன்ற ஒரு உருவம்
அதேபோல் நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர், தற்போது செவ்வாய் கிரகத்தில் பாம்பின் தலை போன்ற ஒரு உருவத்தைக் கண்டுபிடித்தது. Perseverance Rover பூமிக்கு அனுப்பிய பாம்பின் தலை போன்ற பாறை ஒரு பெரிய பாறையில் யாரோ ஒட்டவைத்துப் போல், சமநிலைப்படுத்தும் வகையில் அந்த பாறாங்கல்லுடன் தொடர்பில் உள்ளது. இதை ஒரு புதிரான காட்சியாக நாசா விண்வெளி ஆராய்ச்சி குழு குறிப்பிட்டது.உயிர் அடையாளங்களின் அறிகுறிகளைக் கண்டறியும் நோக்கத்துடன் பெர்சவரன்ஸ் ரோவர் சிவப்புக் கோளில் மிதிக்கும் போது இதை ரோவர் கண்டுபிடித்தது.
Pic Courtesy: NASA
About Us https://bit.ly/3GUPFOa +919942258153 kvk.subadhra@gmail.com
Thank You Very Much for Sharing YourValuable Thoughts
https://0a1e84x77b--czffncqiv71s6x.hop.clickbank.net

Loading comments...