Atengappa! Another level plan.. Japan will send a bullet train to Mars! So special

2 years ago
8

http://ceesty.com/edxJMx

By Vigneshkumar Published: July 17 2022, 12:15 [IST]

டோக்கியோ: ஹாலிவுட் படங்களுக்கே போ்டியை கொடுக்கும் வகையில் நேரடியாகச் செவ்வாய் கிரகத்திற்கு ரயிலை விடும் தொழில்நுட்பத்தைச் சாத்தியப்படுத்துகிறது ஜப்பான்!
உலகின் மற்ற நாடுகள் உடன் ஒப்பிடுகையில் ஜப்பான் தொழில்நுட்பம் எப்போதும் சில ஸ்டெப்கள் முன்னேறியே இருக்கும். இப்போது ஜப்பானுக்குச் சென்றாலும் அந்த வித்தியாசத்தை உணர முடியும்.
அதிநவீன தொழில்நுட்பங்களில் ஜப்பான் தொடர்ச்சியாக பல்வேறு ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அப்படி ஜப்பான் இப்போது சாத்தியப்படுத்த உள்ள தொழில்நுட்பம் நம்மை வியக்கச் செய்துவிடும்.

ஜப்பான்
அதாவது அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரும் காலத்தில் மனிதர்கள் இதர கிரகங்களுக்கு அனுப்புவதே அவர்களின் திட்டம். இதற்கு அவர்கள் ராக்கெட்டை பயன்படுத்தப் போவதில்லை. ரயிலைத் தான் பயன்படுத்தப் போகிறார்கள். ஆம் சரியாகத் தான் படித்தீர்கள். செவ்வாய் மற்றும் நிலவுக்கு மனிதர்களை ரயில் மூலம் அனுப்பும் முயற்சியில் ஜப்பான் தீவிரமாக இறங்கி உள்ளது.
திட்டம்
இதற்காகப் பூமியின் புவியீர்ப்பு, வளிமண்டலம் மற்றும் நிலப்பரப்பைப் போல இருக்கும் கண்ணாடி வாழ்விட அமைப்பையும் உருவாக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது. ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கஜிமா கன்ஸ்ட்ரக்ஷனுடன் இணைந்து இந்தத் திட்டத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வாரம் தான் வெளியிடப்பட்டது.
எப்படி சாத்தியம்
இதனை ஜப்பான் ஆய்வாளர்கள் 'ஹெக்ஸாட்ராக்' என்று அழைக்கின்றனர். இந்த காப்ஸ்யூலுக்கு ஆறு கோணங்கள் இருப்பதால், இதை ஹெக்ஸாட்ராக் என்று குறிப்பிடுகிறார்கள். பூமியை விட்டுத் தொலைவில் செல்லும் போதும், இந்த ஹெக்ஸாட்ராக் அமைப்பில் புவி ஈர்ப்பு விசை பூமியில் இருப்பதைப் போலவே 1G என்ற அளவிலேயே இருக்கும். 15 மீட்டர் வட்டம் கொண்ட ஒரு மினி-கேப்சூல் பூமியையும் நிலவையும் இணைக்கும். அதேபோல 30 மீட்டர் சுற்றளவு கொண்ட ஒரு காப்ஸ்யூல் நிலவையும் சந்திரனையும் இணைக்கும். ஜெர்மனி மற்றும் சீனாவில் உள்ள Maglev ரயில்களில் பயன்படுத்தப்படும் மின்காந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காப்ஸ்யூல் உருவாக்கப்படும்.
கலக்கல் திட்டம்
நிலவில் இருக்கும் ஸ்டேஷன் லூனார் ஸ்டேஷன் என்றும் செவ்வாய்க் கிரகத்தில் உள்ள ரயில் நிலையம் செவ்வாய் ஸ்டேஷன் என்றும் அழைக்கப்படும். அதேபோல பூமியில் இருக்கும் ஸ்டேஷன் டெர்ரா ஸ்டேஷன் என்று அழைக்கப்படும். ஸ்பேஸ் எக்ஸ்பிரஸ் என அழைக்கப்படும் இந்த விண்வெளி ரயில், நிலையான பாதை பாதையில் இயங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தனித்துவம்
பல்வேறு ஆய்வாளர்களும் ஸ்பேஸ் பயணம் குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இருப்பினும், ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் பூமியில் இருக்கும் வசதிகளை மீண்டும் நிலவில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது தனிக் கவனத்தைப் பெற்றுள்ளது. செயற்கை புவியீர்ப்பு, பசுமையான பகுதிகள் மற்றும் நீர்நிலைகள் மற்றும் பொது போக்குவரத்துடன் முழுமையான வாழ்விட அமைப்பை உருவாக்குவதே இவர்களின் திட்டம். இதனை அவர்கள் 'தி கிளாஸ்' என்று அழைக்கிறார்கள்.
புவியீர்ப்பு
குறைந்த புவியீர்ப்பு எப்போதும் பெரிய பிரச்சனை தான். இது இனப்பெருக்கத்தைக் கூட பாதிக்கலாம். இந்த பிரச்சினையைத் தீர்க்கும் வகையிலேயே செயற்கையான புவி ஈர்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், இந்தத் திட்டம் முழுமையாக நிறைவேற ஒரு நூற்றாண்டு கூட ஆகலாம். இருப்பினும், 2050க்குள் ஒரு முன்மாதிரி அமைப்பை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
About Us https://bit.ly/3GUPFOa +919942258153 kvk.subadhra@gmail.com
Thank You Very Much for Sharing YourValuable Thoughts
https://e3421j56798-qxc5uei04v6z5e.hop.clickbank.net

Loading comments...