These are the lifestyle changes you need to make to prevent heart attacks…

2 years ago
32

http://corneey.com/eddmlT
மாரடைப்பு என்பது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய பாதிப்பாகும். எனவே நாம் மாரடைப்பு வராமல் தடுக்க நம் வாழ்க்கை

உங்க கிட்ட கிரெடிட் கார்டு இருக்கா? அப்போ கட்டாயம் இதைப் பாருங்க!
நம் உடலில் மிக முக்கியமான உறுப்பு என்றால் அது இதயம் தான். இதயம் தான் பல்வேறு உறுப்புகளுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் வேலையை செய்து வருகிறது. இருப்பினும் இன்றைய நவீன வாழ்க்கை முறை மாற்றங்களால் இதய நோய்களால் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இளம் வயதிலேயே நிறைய இளைஞர்கள் மாரடைப்பில் இறக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் நாம் பின்பற்றி வரும் மோசமான வாழ்க்கை முறை மாற்றங்கள் என்கிறார்கள் நிபுணர்கள்.

தவறான உணவுப்பழக்கம், மன அழுத்தம் மிக்க வேலைகள், உடல் செயல்பாடுகள் இல்லாமல் இருத்தல் போன்ற காரணங்களே மாரடைப்புக்கு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் சுமார் 17 மில்லியன் மக்கள் இதய நோய் பாதிப்புக்குள்ளாகி மரணமடைகிறார்கள். இதில் இந்தியாவைப் பொருத்த வரை 25 சதவீதம் பேர் 40 வயதுக்குள்ளாகவே மாரடைப்புக்கு ஆளாகிறார்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே மாரடைப்பில் இருந்து தப்பிக்க நாம் எத்தகைய வாழ்க்கை முறை மாற்றங்களை செய்ய வேண்டும் நிபுணர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்.
​மாரடைப்பில் இருந்து தப்பிக்க நிபுணர்கள் கூறும் கருத்துக்கள் :
மன அழுத்தத்தில் இருந்து விலகி இருங்கள் : இன்றைய இளைஞ முதல் பெரியவர்கள் வரை சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை மன அழுத்தம். மன அழுத்தம் உங்க உடலில் கார்டிசோல் ஹார்மோன் அளவை அதிகரிக்க ஆரம்பித்து விடும். மேலும் மன அழுத்தம் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இதனாலும் இதயத்திற்கு அழுத்தம் ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது. எனவே மன அழுத்தத்தை விரட்ட யோகா போன்ற விஷயங்களை செய்து வரலாம். உடலையும் மனதையும் அழுத்தம் இல்லாமல் வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும்.
கல்லீரலில் அழுக்குகள் தேங்காமல் சுத்தம் செய்ய சாப்பிட வேண்டிய 5 பழங்கள் என்னென்ன...
தியானம் மற்றும் மூச்சு பயிற்சி செய்வதன் மூலம் உங்க மனதை அதியானம் மற்றும் மூச்சு பயிற்சி செய்வதன் மூலம் உங்க மனதை அமைதியாகவும் ரிலாக்ஸாகவும் வைக்க முடியும். யோகா என்பது உடல், மன மற்றும் ஆன்மீக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு முழுமையான ஆரோக்கியமாகும். எனவே நீங்கள் தினந்தோறும் சில ஆசனங்களை செய்து வரலாம்.
அதோமுக ஸ்வனாசனம், புஜங்காசனம், மர்ஜாரி ஆசனம் சந்தோலனாசனம், அஷ்டாங்க பிராணமாசனம், அஸ்வசஞ்சலனாசனம், வஜ்ராசனம், தடாசனம், ஹஸ்தா உதனாசனம் மற்றும் பாலாசனம் போன்ற ஆசனங்களை செய்து வரலாம்.
​யோகா முத்திரை நிலைகள் :

முதலில் வசதியாக தரையில் உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்க உள்ளங்கைகள் மேல்நோக்கி இருக்குமாறு கைகளை தொடைகளில் அல்லது முழங்காலில் வையுங்கள்.
பத்மாசனம், சித்தாசனம், ஸ்வஸ்திகாசனம், வஜ்ராசனம் போன்ற தியான ஆசனங்கள் முத்திரை பயிற்சிக்கு ஏற்றவை.
உயர் இரத்த அழுத்தத்தை இயற்கையாகவே குறைப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டிய 10 விஷயங்கள் என்னென்ன...
​ஹ்ரிதயா முத்ரா (சஞ்சீவனி முத்திரை):

இந்த முத்திரையை செய்து வருவதன் மூலம் மாரடைப்பை தடுக்க முடியும். இது மிருதசஞ்சீவானி முத்ரா அல்லது இதயத்தின் சைகை என்றும் ஹிருதய முத்ரைஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த முத்திரையின் வழக்கமான பயிற்சியானது சாதாரண இதய நோய் அல்லது இதயத்தின் தமனிகளில் இரத்த ஓட்டம் இல்லாவிட்டால் ஏற்படும் மாரடைப்பு வாய்ப்புகளை குறைத்துவிடும் என்கிறார்கள் நிபுணர்கள். இதை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.
உங்கள் கண்களை மூடிக்கொண்டு கவனமாக ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்.
உள்ளங்கைகள் மேல்நோக்கி வானத்தை பார்க்குமாறு முழங்காலில் அவற்றை வைத்து ஆழ்ந்த சுவாசம் மேற்கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் கையின் ஆள்காட்டி விரலை வளைத்து கட்டை விரலின் வேரில் வைத்து நடுவிரலின் முதல் நுனி மற்றும் கட்டை விரலின் முதல் நுனியால் மோதிர விரலை தொட்டு லேசாக அழுத்தவும்.
மீதமுள்ள சுண்டு விரலை முடிந்த வரை நீட்டிக்க வேண்டும்.
​பிராண முத்திரை :

இந்த முத்திரையும் மாரடைப்பை போக்க உதவுகிறது. கட்டைவிரலின் நுனியால் மோதிரம் மற்றும் சிறிய விரல் நுனிகளை இணைக்க வேண்டும்.
மற்ற அனைத்து விரல்களும் நேராக நீட்டப்பட வேண்டும்.
மூச்சை உள்ளிழுத்து வெளியே விட வேண்டும். (மந்திரம் சொல்லிக் கொண்டு)
உங்களுக்கு நாள்பட்ட பிரச்சினை இருந்தால் இந்த முத்திரையை காலையில் ஒரு முறை மற்றும் மாலையில் 15 நிமிடங்கள் என செய்து வாருங்கள்.
நார்ச்சத்து உணவுகள் அதிகம் கொண்ட உணவுகளை தினமும் சாப்பிடுவதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்...
​ஹாக்கினி முத்திரை :

இதுவும் மாரடைப்பை தடுக்க உதவுகிறது. இந்த முத்திரையை பயிற்சி செய்ய, முதலில் உள்ளங்கைகளை ஒரு சில அங்குல இடைவெளியில் எதிர்த்திசையில் வைத்து இரண்டு உள்ளங்கை விரல்களையும் ஒன்றுடன் ஒன்று தொட்டுக் கொண்டிருக்குமாறு வையுங்கள்.
ஒரு உள்ளங்கையில் உள்ள 5 விரல்கள் மற்ற உள்ளங்கை விரல்களை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். கைகளை நெற்றியில் உள்ள மூன்றாவது சக்கரம் வரைக் கூட உயர்த்திக் கொள்ளலாம். மூச்சை ஒவ்வொரு முறை உள்ளிழுக்கும் போதும் நாக்கை வாயின் மேல்பகுதிக்கு எதிராக வைக்க வேண்டும். ஒவ்வொரு சுவாசத்திலும் தளர்வாக்க வேண்டும்.
அதே மாதிரி நம் இதயத்தை ஆரோக்கியமாக வைக்க சூரிய மற்றும் சந்திர நமஸ்காரம் செய்து வரலாம். சந்திர நமஸ்காரம் ஒரு சிறந்த இதய திறப்பானாக செயல்படுகிறது. இதை காலையில் அல்லது மாலையில் என வாரத்திற்கு குறைந்தது 3 முறையாவது செய்ய வேண்டும்.
About Us https://bit.ly/3GUPFOa Contact: +919942258153 kvk.subadhra@gmail.com
Thank You Very Much for Sharing YourValuable Thoughts
https://83270b553a99jzacwfu2y6hg4u.hop.clickbank.net

Loading comments...